தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுக்க நீர்த்தேக்கத்தை காலி செய்த அரச அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுக்க நீர்த்தேக்கத்தை காலி செய்த அரச அதிகாரி!

இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சத்தீஸ்கர் மாநிலமான உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.

ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்ஃபி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்தது.

இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடிய போதும் அவர்களால் அந்த ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, மூன்று நாட்களாக மில்லியன் கணக்கான லிட்டர் நீரை அவர் வெளியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அது இயங்க முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தது.

தமது கைப்பேசியில் முக்கியமான அரச கருமம் சார்ந்த தரவுகள் இருப்பதன் காரணமாகவே அதை மீட்டெடுக்க வேண்டும் அந்த அதிகாரி கூறியிருந்தார்.

எனினும், அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அருகில் உள்ள கால்வாயில் சிறிது தண்ணீரை வெளியேற்றப் போவதாக ஒரு அதிகாரியிடம் வாய்மொழி அனுமதி பெற்ற நிலையிலேயே குறித்த அதிகாரி நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றியுள்ளார்.

கைப்பேசியை கண்டுபிடிப்பதற்காக அவரால் வெளியேற்றப்பட்ட நீர், 6 சதுர கிமீ அதாவது 600 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமானது என்று கூறப்படுகிறது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.