
அதன்படி இன்று (07) காலை பாணந்துறை, வாலான சந்தியில் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியின் சாரதி தூங்கியமையினால் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஜீப் வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் மூன்று சிறு குழந்தைகளும் அடங்குவதாகவும், விபத்தில் காயமடைந்தோர்கள் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.