
ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் புகுந்த மர்மநபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்மநபரை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெக்சாஸுக்கு வடக்கே சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் துப்பாக்கிச்சூடு சம்பவம் 'சொல்ல முடியாத சோகம்' என்று தெரிவித்தார்.