கடந்த மே மாதம் 20ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
லங்கா ஏகநாயக்க என்ற 33 வயதுடைய நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கிளப் முகாமையாளர் எனவும் அவரது இடது கையின் கீழ் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல்நோக்கி பறவையின் இறகு ஒன்றை பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு – 071 859 1733
நிலைய கட்டளைத் தளபதி கொழும்பு குற்றப் பிரிவு – 071 85917335
நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 – 071 8596503