அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு புதிய இணைப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கூட்டத்தில் புதிய இணைப்பாளர் தெரிவு இடம்பெற்றதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பேராதனை பல்கலைக்கழகத்தின் மதுஷான் சந்திரஜித் புதிய இணைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளார்.