சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் 12 வயது பாடசாலை சிறுவன் ஒருவனின் சப்பாத்தை பலவந்தமாக கழற்றி கொண்டு சென்றுள்ளதாக அங்குருவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மில்லகஸ்பொல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த 7 ஆம் வகுப்பு மாணவன் நேற்று (16) காலை 7.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து ஒரு காலிலிருந்த சப்பாத்தை பலவந்தமாக அவர்கள் கழற்றிச் சென்றதாக குறித்த சிறுவன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.