அலி சப்ரியின் கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலி சப்ரியின் கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம்!


நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரமுகர் ஓய்வறையின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் பயணப்பொதிகள் சுங்கத்தினால் இனிவரும் காலங்களில் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்குள் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கடத்தப்பட்டதன் நேரடி விளைவாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.


முக்கிய பிரமுகர்களின் வழியாக செல்பவர்கள் அல்லது வருபவர்கள் தொடர்பில் ஏற்கனவே உள்ள நடைமுறை பின்பற்றப்படும்.


எவ்வாறாயினும், அதன்பிறகு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான ஸ்கேனிங் இயந்திரம் மூலம் சுங்கப்பிரிவினர், அவர்களின் பொதிகளை பரிசோதனை செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செவ்வாய்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரியிடம் இருந்து 3.4 கிலோ மதிப்புள்ள தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதனையடுத்து சுங்கத்துறை அவருக்கு 7.4 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தது.


இதன்போது அவருடன் வந்த உதவியாளர் என்று கூறப்பட்ட நபரிடம் இருந்து 19 கைப்பேசிகள் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


இதேவேளை சப்ரி ரஹீம் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆறு தடவைகள் டுபாய்க்கு பயணம் செய்துள்ளதாக சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


அத்துடன் அவர் ஒரு பணக்கார கடத்தல் குழுவின் பொருட்களை எடுத்து வருபவராக செயல்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை சந்தேகிப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.