கல்கிசை உணவக உரிமையாளர் கொலை சம்பவம்; சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்கிசை உணவக உரிமையாளர் கொலை சம்பவம்; சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்!


பணத் தகராறில் கல்கிசை பகுதியில் உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரைக்  கைது போது, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


கடந்த 22ஆம் திகதி சந்தேக நபர் பலாப்பழம் விற்பனை செய்ய வந்துள்ள நிலையில் உயிரிழந்தவரிடம் 250 ரூபாவை தருமாறு கேட்டதாகவும், உணவக உரிமையாளர் 200 ரூபாய்தான் தர முடியும் என கூறியதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


குற்றச் செயலின் பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.