advertise here on top
Join yazhnews Whatsapp Community

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!

 

கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று நடைபெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில், எரிபொருள் இறக்குமதி, முகாமை, விநியோகம் மற்றும் விற்பனை தரவுகளை ஆய்வு செய்த பிறகு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இன்று ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.


தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றரில் இருந்து 08 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 04 லீற்றரில் இருந்து 07 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையிலும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.