அரை சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரை சொகுசு பேருந்துகள் தொடர்பாக கிடைக்கப்பெறும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ மேலும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் அரை சொகுசு சேவையை சாதாரண சேவையாக அல்லது சொகுசு சேவையாக மாற்றுமாறு அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுமார் 430 அரை சொகுசு பேருந்துகள் உள்ளதாகவும், சுமார் 20 பேருந்துகளுக்கு இதுபோன்ற சேவை மாற்றங்களுக்கான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.