இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (28) நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
யுனைடெட் பெட்ரோலியம் அடுத்த வாரத்தில் தொடங்கும் திகதிகளைத் தெரிவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)