பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம்!


2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.


எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும்.


இந்நிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.