லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைந்தது!

 

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.


அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு விலையை குறைத்துள்ளது.


இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் புதிய விலை 3,738 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலையை 1502 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு விலையை 700 ரூபாவாகவும் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.