இறக்குமதி செய்யப்படும் பால்மா 200 ரூபாவால் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறக்குமதி செய்யப்படும் பால்மா 200 ரூபாவால் குறைப்பு!


இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பொதியின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.


இதனிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


இந்த முட்டைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை என PHI சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், இன்று முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை சாலையோரங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற விவசாய பொருட்களை விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.