
அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு பொருத்தமற்ற வாகனங்கள் மற்றும் பொருத்தமற்ற வகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நுழைவதற்கு வருவதோடு, அவ்வாறான வாகனங்கள் அதிவேக வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பை நோக்கி வரும் பாதைகளில், வெளியேறும் மையங்களில் சில வாகன நெரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெளியேறுமிடத்தில் அணிவகுத்து நிற்கும் போது தவிர, பாதையை விட்டு நகர முயற்சிக்க வேண்டாம்.
பயணிக்கும் பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மாத்திரம் வாகனங்கள் வர வேண்டும் எனவும், அந்த வாகனங்களுக்கு மாத்திரமே வெளியேற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)