பதுளையில் உள்ள பாடசாலை ஒன்றின் வருடாந்த BIG MATCH கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த கிரிக்கெட் போட்டிக்காக சென்றிருந்த மாணவர்கள் பதுளை நகரில் உள்ள மைதானம் ஒன்றுக்குள் வாகன பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதன்போது, மாணவர்களுடன் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 09 மாணவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 19 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Two students die in Big Match road show accident
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 1, 2023
Details: https://t.co/li3TYeO03U pic.twitter.com/mevVD4Kyhk