யாழ். - நெடுந்தீவு 12ஆம் வட்டாரம், துறைமுகம் பகுதியில், வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த கொலைகள் நேற்றிரவில் (21) இருந்து இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதியில், இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இனந்தெரியாத சிலர் குறித்த கொலைச் சம்பவத்தை முன்னெடுத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. ஏனைய மூவரும் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், காயமடைந்துள்ள மற்றுமொரு பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகைத்தந்தவர் என காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.