நீர்கொழும்பு குரணையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் இருந்து 40 மில்லியன் ரூபா பெறுமதியான SUV வாகனத்தை திருடிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 18 – 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கட்டானா கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தினத்தில் வாகனத்தை திருடுவதற்கு உதவிய சந்தேகநபர்களில் 19 வயதுடைய கார் விற்பனை நிலையத்தில் வேலை செய்பவரும் அடங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
SUV ரக வாகனத்தை திருடிவிட்டு வாகன விற்பனை நிலையத்திலிருந்து தப்பிச் செல்லும் போது கொச்சிக்கடை பகுதியில் விபத்துக்குள்ளானதை அடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தையடுத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)