மிகப்பெரிய பயணிகள் விமானமும் முழு நீள இரட்டை அடுக்கு விமானமான எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ380-842 (A380-842) (விமான இலக்கம்-EK449) விமானம் நியூசிலாந்து ஒக்லேண்ட் (Auckland) இல் இருந்து புறப்பட்டு எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.14 மணியளவில் தரையிறங்கியது.
குறித்த விமானம் 62800 லீட்டர் ஜெட் ஏ1 (Jet A1) தர எரிபொருள் இனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பிக்கொண்டு மீண்டும் அதிகாலை 4.50 மணிக்கு டுபாய் நோக்கி புறப்பட்டது. (யாழ் நியூஸ்)