
உடப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியொருவர், தனது கணவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தப் பெண் இதனைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தை குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது. குழந்தையின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியை இறால் வளர்ப்பு தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் உடப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தொட்டியில் விழுந்ததாக சந்தேகநபர் முதலில் பொலிஸாரிடம் தெரிவித்திருந்த போதிலும், இறால் பண்ணையின் சிசிடிவியை பரிசோதித்த போது சந்தேக நபர் தனது மகளை கையால் பிடித்து தள்ளுவது தெளிவாக காணப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறால் தொட்டிக்குள் குழந்தை போராடிக்கொண்டிருந்ததை பார்த்த தொழிலாளி ஒருவர் குழந்தையை காப்பாற்றியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. (யாழ் நியூஸ்)