நாட்டில் சிறப்பு சிசுக்கள் பெறும் மையங்கள்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் சிறப்பு சிசுக்கள் பெறும் மையங்கள்!


தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையம் (NCPA) ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிசு பெறும் மையங்களை நிறுவ முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒப்படைக்க அனுமதிக்கும் என்று NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க கூறினார்.


நேற்று (13) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமரசிங்க, பல்வேறு காரணங்களால் புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோருக்கு உதவுவதற்காக 2021 ஆம் ஆண்டு NCPA யினால் சிசு பெறும் நிலையங்கள் தொடர்பான முன்மொழிவு வரையப்பட்டது. 


இந்த பிரேரணை 2021 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்த அமரசிங்க, எனினும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அமைச்சரவை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


இவ்வாறான சிசுக்களை பெறும் நிலையங்கள் இந்தியாவில் பிரபலமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, இலங்கையில் அண்மைக்காலமாக சிசுக்கள் கைவிடப்படுவது அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலையங்களை ஸ்தாபிக்க வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.