
அதன்படி, இன்று ரயில் பணிப்புறக்கணிப்பு நடைபெறவுள்ளதால், மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் இ.போ.ச பஸ்களை அதிகூடிய எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)