இறக்குமதி டயர்களுக்கு விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறக்குமதி டயர்களுக்கு விலை குறைப்பு!


இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை களஞ்சியத்தில் உள்ளமையினால் ஐந்து வீதம் மாத்திரமே விலைக்குறைப்பு செய்ய முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்


எனினும் தற்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளமையினால் தற்காலிகமாக ஐந்து சதவீதத்தினால் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் மூன்று மாதங்களில் 15 சதவீதமாக விலையினை குறைக்க முடியும் எனவும் டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.