இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்றைய விலையான 161,000 ரூபாயில் இருந்து இன்று (30) 22 காரட் சவரன் விலை 163,800 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 24 கரட் தங்கம் ஒன்றின் விலை 178,000 ரூபாவாகும். இது நேற்றைய விலையான 175,000 ரூபாயிலிருந்து அதிகரிப்பாகும். (யாழ் நியூஸ்)