
இச்சலுகைகள், சுற்றுலாத் துறை, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச்சேவை வழங்குநர்கள், போக்குவரத்து, பாடசாலை வேன் சேவை வழங்குநர்கள், பார ஊர்திகள், சிறிய பொருள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் அத்துடன் தனியார் துறை ஊழியர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட துறைகளின் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு பெருமளவில் உதவியளித்தன. கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட வங்கித்தொழில் துறை மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறை என்பவற்றின் கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட கடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதியின் இறுதிக்;கட்டம் முறையே, 2022.06.30 அன்றும் 2022.03.31 அன்றும் முடிவுற்றது.
நிதியியல் முறைமை மீதான ஏதேனும் மிகையான அழுத்தத்தினை தடுக்கும்பொருட்டு, நிலைபேறான வழியில் கடனைக் காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதியினை முடிவுறுத்துவதற்கான தேவையினை பரிசீலனையிற்கொண்டு, கடன்பெறுநர்களது புதிய மீளச்செலுத்தும் இயலளவின் அடிப்படையில் பொருத்தமான மீளச்செலுத்தல் ஏற்பாடுகள் மீது அத்தகைய கடன்பெறுநர்கள் இணங்குவதை இயலச்செய்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கும் முறையே வழங்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2022ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சுற்றறிக்கை என்பன ஊடாக ஆறு மாதங்களைக் கொண்ட காலப்பகுதியில் விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் உள்ளடங்கலாக பொருளாதார துறைகளிலுமுள்ள அனைத்து பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கும் பொருத்தமான சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளையும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களையும் இலங்கை மத்திய வங்கி கோரியிருந்தது. இதற்கிடையில், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்யும் வாய்ப்புடன்கூடிய வளம்பெறக்கூடிய வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் நோக்குடன் உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறைவாக செயலாற்றுகின்ற அத்துடன் செயலாற்றமற்ற கடன்பெறுநர்களை இனங்கண்டு உதவும் பொருட்டு கொவிட்-19 இற்குப் பிந்திய புத்துயிரளித்தல் பிரிவுகளை உருவாக்குமாறு இலங்கை மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது.
கடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதியினதும் சலுகைகளினதும் வேறுபட்ட கட்டங்களின் போது நிதியியல் நிறுவனங்கள், சலுகைகளுக்கான 3.3 மில்லியன் கோரிக்கைகளுக்கு மேலதிகமாக அனுமதியளித்துள்ளன. 2022 இறுதியிலுள்ளவாறு இது மொத்தமாக ரூ.5,569 பில்லியன் ஆகும்.
முழு அறிக்கை


