யாழ் மாநகர சபை உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ரெமீடியாஸின் அகால மரணம் பாரிய கவலையளிக்கின்ற விடயமாகும்.என்னோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் ஒன்றாக கல்விகற்ற ரெமீடியாஸ் மிகவும் பண்பான மனிதர்.
பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பல நன்மையான விடயங்களை செய்தவர்.என்பதோடு தமிழ்,முஸ்லிம் மாணவர்களின் ஐக்கியத்திற்காக என்றும் குரல் கொடுத்தவர்.பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு பின்பு தான் பிரதிநிதித்துவம் செய்யும் யாழ் மாநகர மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் பெரும் நன்மைகளையும் சமூக சேவைகளையும் செய்து இருக்கின்றார். அது மட்டுமன்றி சட்டரீதியாக நலிவுற்ற மக்களுக்கும் பல உதவிகளை செய்து இருந்தார். அதனால் யாழ் மாநகர மக்கள் அவரை மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்தார்கள்.
இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று அகால மரணம் அடைந்துள்ளார். இவருடைய இழப்பு எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.
இவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள் குடும்பத்தினர்,மற்றும் யாழ் மாவட்ட மக்களோடு நானும் பங்குகொள்வதுடன் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
பாராளுமன்ற உறுப்பினர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ஊடகப்பிரிவு
(சர்ஜுன் லாபீர்)