பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலர் உயிரிழப்பு..அவசரநிலை பிரகடனம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலர் உயிரிழப்பு..அவசரநிலை பிரகடனம்!

மத்திய துருக்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய கிழக்கு துருக்கியின் சில மாகணங்களிலும் இருந்தது.

துருக்கியின் காஜியண்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு, “கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

மலாத்யா, தியார்பாகிர் மாகாணங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனினும், உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம், பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இதன்காரணமாக அந்நாட்டில் உச்சகட்ட அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.