இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று (02) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே காட்டப்பட்டுள்ளது.
- ஆட்டோ டீசல் - ரூ 15 (புதிய விலை ரூ 405)
- மண்ணெண்ணெய் - ரூ.10 (புதிய விலை ரூ.355)
ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)