தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா , அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா , அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயது அம்லா தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9282 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 46.4 ஆகும். அதேபோல் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49.46 ஆகும். மேலும் , 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு கவுன்டி, டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார்.

கடந்த வருடம் கவுன்டி சாம்பியன்ஷிப்பை சர்ரே அணி வென்றது. இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தற்போது அறிவித்துள்ளார். எஸ்.ஏ.டி20 போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அம்லா பணியாற்றி வருகிறார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.