
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாய் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (05) காலை நாடு திரும்பினார்.
கோட்டாபய ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தகவல் வெளியானது.
அவருடன் மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையும் சென்றிருந்தனர்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

