
மேலும் இரண்டு காட்டு யானைகளும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
ஓடும் ரயிலில் யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளதுடன், மற்ற இரு யானைகளும் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஹபரணை - கல் ஓயா ரயில் பாதையில் ஹபரணை ஹதரஸ்கொடுவ பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்ட யானைக்கு 20 வயது இருக்கும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலின் பின் இயந்திரத்தில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ( யாழ் நியூஸ்)

