
தோக்கியோவின் நரிடா விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவுக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து சுபு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள், 6 சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் காயமடைந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு விமானத்தில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என என்எச்கே ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.