
இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு இருபது இறக்குமதியாளர்கள் டெண்டர்களை சமர்ப்பித்துள்ள போதிலும் அவை இன்னும் திறக்கப்படவில்லை என அதன் தலைவர் திரு.அசேல சம்பத் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலையை எவ்வாறு கூறுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் காரணமாக டெண்டர் விடப்பட்ட விலையை உடனடியாக பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)