
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான சீனாவின் தேவை குறைவடைந்தமை, உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலைமை மற்றும் டொலர் வலுவடைதல் போன்ற காரணங்களால் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று (03) பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.81 டொலர்களால் குறைவடைந்து, அதன் புதிய விலை 82.10 டொலர்களாக பதிவாகியிருந்தது.
மேலும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 4.1 சதவீதத்தால் குறைவடைந்து, 76.93 டொலர்களாக பதிவாகியிருந்தது.