
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை நாடு திரும்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி 8 பேர் கொண்ட முதலாவது குழு கடந்த 24 ஆம் திகதி இலங்கை வந்துள்ளதுடன் மேலும் 6 பெண்கள் நேற்று (02) இலங்கை வந்தடைந்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)