
இன்று முதல் முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று (07) கொழும்பில் 10 இலட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அத்துடன், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ முட்டைகளை இறக்குமதி செய்யும் பொறுப்பை அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இதேவேளை, முட்டை இறக்குமதிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை சர்வதேச ஏலம் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.