அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ரூபவாஹினி ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, அசம்பாவிதம் செய்த சந்தேகநபர் ஒருவர் குருந்துவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கண்டி நீர்த்தேக்க வீதி பகுதியில் வசிக்கும் நாற்பத்து நான்கு வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)