
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள இந்த கோவிலை தரிசிப்பதற்காக அவர் உள்ளிட்ட யாத்ரீகர்கள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
இவர்களில் 20 பேரிடம் 30 கிலோ எடையுள்ள இரும்பு பார்சல் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்புச் சந்தையில் கொள்வனவு செய்து இவற்றை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ததாக அந்தக் குழுவினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இரும்புப் பொதியை வைத்திருந்த நபரிடம் இருந்த அதே பார்சலில் டி56 தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)