450 கிராம் எடை கொண்ட பாண் இறாத்தலின் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 450 கிராம் எடை கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று (17) நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.