என்ன நடந்தது
ரிஷப் சமீபத்தில் உத்தர்காண்ட்-க்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை டெல்லிக்கு திரும்பியுள்ளார். நெடுஞ்சாலை என்பதால் வேகமாக வந்த அந்த கார், திடீரென ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் என்னசெய்வதென்று புரியாத அவர் சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது

தீவிர சிகிச்சை
கார் மோதிய உடனேயே தீயும் பற்றி எரிய தொடங்கியது. காரின் உள்ளே இருந்த ரிஷப் பண்ட் படு காயங்களுடன் மயக்க நிலைக்கே சென்ற போது, அங்கு விரைந்த ஊர்மக்கள், அவரை பெரும் போராட்டத்திற்கு பின் மீட்டனர். மேலும் அருகே உள்ள சாக்ஷம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை தகவல்
ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை குறித்து கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ' ரிஷப் பண்ட்-க்கு பயப்படும் அளவிற்கு ஒன்றும் ஆகவில்லை எனக்கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு தலையிலும், கால் பகுதியிலும் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முதுகுபகுதியிலும் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

விளையாட முடியுமா?
சமீப காலமாகவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்களில் தடுமாறி வந்த ரிஷப் பண்ட், இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. 6 மாதங்கள் வரை அவரால் விளையாட முடியாது எனக்கூறப்படுகிறது.