நம்பர் 10 ஜெர்சிக்கு உயிர் கொடுத்தவர்..ஓபாமா முதல் மெஸ்ஸி வரை பீலேவுக்கு இரங்கல்..கண்ணீரில் பிரேசில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நம்பர் 10 ஜெர்சிக்கு உயிர் கொடுத்தவர்..ஓபாமா முதல் மெஸ்ஸி வரை பீலேவுக்கு இரங்கல்..கண்ணீரில் பிரேசில்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல் செய்தி குவிந்த வண்ணம் உள்ளன. விளையாட்டு துறையில் பேரிழப்பு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஓபாமாவின் இரங்கல்

பீலேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கால்பந்து என்ற அழகான விளையாட்டை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர் பீலே , உலகம் முழுவதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வீரராக பீலே திகழ்ந்ததாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். விளையாட்டிற்கு மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி இருப்பதை பீலே அறிந்து கொண்டதாக குறிப்பிட்ட ஒபாமா பீலேவின் குடும்பத்திற்கு மற்றும் ரசிகர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி, ரொனால்டோ இரங்கல்

கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் ரெஸ்ட் இன் பீஸ் என்று அர்ஜென்டினா மொழியில் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரேசில் மக்களுக்காக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பீலேவின் மறைவால் ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் எந்த அளவிற்கு துயரத்தில் இருக்கிறது என்பதை வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியவில்லை. கால்பந்து விளையாட்டின் என்றும் அழியாத அரசன் பீலே என்று குறிப்பிட்டுள்ள ரொனால்டோ, பல கோடி மக்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வீரராக இருந்தார் என்று பாராட்டியுள்ளார்.

நேமார் இரங்கல்

நேற்று, இன்று நாளை என எந்த வீரர் வந்தாலும் இனி பீலே உடன் தான் ஒப்பிட்டு மக்கள் பேசுவார்கள் என்று குறிப்பிட்ட ரொனால்டோ, பீலே தமக்கு காட்டிய அன்பை என்னால் இனி பெறவே முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களின் மனதில் எப்போதும் பீலே இருப்பார் என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார். பீலேவின் மறைவுக்கு பிரேசில் வீரர் நேமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பீலேவுக்கு முன்னால் பத்து என்பது வெறும் நம்பராக தான் இருந்தது.

உசைன் போல்ட்

கால்பந்து என்று ஒரு விளையாட்டை முற்றிலுமாக மாற்றியவர் பீலே. விளையாட்டை கலையாக மாற்றி அதனை பொழுது போக்காக கொண்டு சென்றார்.

பீலே, ஏழை மக்களுக்காகவும் கருப்பின மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். பிரேசிலின் தோற்றத்தையும் கால்பந்தையும் உயர்த்திய பெருமை பீலேக்கு தான் சேரும். பீலே வேண்டுமானாலும் மறையலாம். ஆனால் அவருடைய அதிசயங்கள் என்றும் நம்முடன் இருக்கும் என்று நேமார் பாராட்டிருக்கிறார். இதேபோன்று பிரபல ஓட்டப்பந்த வீரர் உசைன் போல்ட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் விளையாட்டு துறைக்கு ஜாம்பவான் பீலே. இனி அமைதியாக ஓய்வு எடுங்கள் அரசன் பீலே என்று போல்ட் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.