
கோட்டை நாக விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர், அரசாங்கம் சட்டங்களை இயற்றுவதை தேரர்கள் விரும்பவில்லை எனவும், புத்த சாசனத்தில் தேரர்களுக்கு ஏராளமாக விதிமுறைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மற்றுமொரு புத்தகம் கொண்டு வருவதற்கு தயாராகி வருவதாகவும், தற்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பிக்குகள் வந்து பேசுவார்கள் எனவும் அதனை மட்டுப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருசில சிறிய விடயங்களினால் விமர்சனங்கள் ஏற்படுவதாகவும், சட்டத்தின் பின்னரே இவ்வாறான பிரச்சினைகள் வரும் எனவும் எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)