நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது!


வளிமண்டல சூழலை கருத்திற்கொண்டு நாளை (09) பாடசாலை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது


கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா. புவனேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக் கடிதத்தில், தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் பலத்த சூறாவளியுடன் குளிந்த காலநிலையும் மாறியுள்ளது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகையான குளிருடன் மழையும், அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும் வீசும் என ஆளுநர்களாலும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், நாளை வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


நாளை வெள்ளிக்கிழமையும், இன்று வியாழக்கிழமை மாதிரியான சூழ்நிலை நிலவுமாக இருந்தால் மாணவர்களை பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்புவதில் அச்சம் கொள்வர். ஆகையால் நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைகளை மூடுவதே பொருத்தம் என பலரும் கருதுவதால் பொருத்தமான முடிவினை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம், என்றுள்ளது.


Update: 


இதனடிப்படையில், நாளை (09) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.