மாமனாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட மருமகன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாமனாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட மருமகன்!


கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


நேற்று (02) இரவு பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தனது மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் மாமனார் அவரை கட்டையால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.