
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மரக்கறிகளை கொண்டு செல்வதற்காக புகையிரத திணைக்களத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு 5 விசேட புகையிரத பெட்டிகளை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டமாக இது அமுல்படுத்தப்பட்டு, நேற்று (27) பிற்பகல் நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு மரக்கறிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஊடாக கொழும்பு பல்பொருள் அங்காடிகள் மற்றும் மெனிங் சந்தைக்கு தேவையான மரக்கறி இருப்புக்கள் அந்த புகையிரதத்தில் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)