மஹரகமை கபூரியாவில் கைகலப்பு மாணவர் ஒருவர் வைத்தியசாலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹரகமை கபூரியாவில் கைகலப்பு மாணவர் ஒருவர் வைத்தியசாலையில்!

பெருந்தகை N D H அல்ஹாஜ் அப்துல் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட கபூரியா அரபிக்கலாசாலையை அபகரிக்கும் முயற்சிகளை தற்போது பெருந்தகை அப்துல் கபூர் அவர்களின் பரம்பரையில் உதித்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது முழு நிர்வாகத்தையும் கைப்பற்றிய அவர் நிர்வாகிகளுக்கு உள்நுழையும் தடையையும் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும இதன் காவலர்களாக மாற்று மதத்தவர்களை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் . அங்கு பள்ளிவாசலுக்குச் செல்வேருக்கு இவர்கள் தொந்தரவுகளையும் விசாப்புக்களையும் நடத்தி வருகன்றனர்

இதைத் தொடர்ந்து இவர்கள் மாணவர்களுகு ஏற்படுத்திய இடையூறுகளைத் தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில்

ஏற்பட்ட சர்ச்சை மோதலில் முடிந்துள்ளது. இது சம்பந்தமாக மகரகமை பொலீஸ் நிலையத்தில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு,

கைகலப்பின் போது காயமடைந்த மாணவர் ஒருவர் கலுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக கபூரியா மதரஸாவின் நீண்டகால நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டபோது, அவர் கூறியதாவது,

மதரஸாவை கைப்பற்ற முனையும் குறிப்பிட்ட நபருக்கும், அவரினால் நியமிக்கப்பட்டிருக்கும் காவலாளிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையில்
ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது காவலாளிகள் அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசலுக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியதாகவும் பூட்ஸ் (பாதணி) கால்களுடன் பள்ளிவாசலுக்குள் புகுந்ததினால் இது கைகலப்பாக மறியதாகவும் தெரிவித்தார்.

யாழ் நியூசிற்காக பேருவளை ஹில்மி 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.