
இதன்படி, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், திறைசேரியின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், இந்தக் கொடுப்பனவுகளை இரண்டு பகுதிகளாகச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்ததாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)