திருமண நிகழ்வொன்றுக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளதாக பகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (04) பிற்பகல் 4.30 மணியளவில் பகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியில் கேம்பியன் வத்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயரமான பள்ளம் கொண்ட வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், ஹட்டன் கொட்டகலை ரெசிட்டா தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் பகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பக்வந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)