29 வயதான சொந்த மகனை கோடரியால் கொத்தி கொலை! காரணம் இதுதான்!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

29 வயதான சொந்த மகனை கோடரியால் கொத்தி கொலை! காரணம் இதுதான்!


ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (04) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று அதிகாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


பாதிக்கப்பட்ட 29 வயதுடைய நபர் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​சந்தேக நபர் கோடரியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


பாதிக்கப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.