2023இல் இரண்டு கட்ட மின்சார அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2023இல் இரண்டு கட்ட மின்சார அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்!


இலங்கை மின்சார சபையின் தற்போதைய இழப்பை ஈடுகட்டுவதற்காக 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு படிகளின் கீழ் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (29) நடைபெற்ற தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உபகுழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.


தற்போதைய நட்டத்தை ஈடுகட்டுவதற்கு சுமார் 70% மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை பிரதிநிதிகள் சந்திப்பின் போது தெரிவித்ததாக இலங்கை பாராளுமன்றத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.


இலங்கை மின்சார சபை தற்போது கிட்டத்தட்ட ரூ. 650 பில்லியன் தொகையை வங்கிகள் மற்றும் மின்சார விநியோகஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடனாக பெற்றுள்ளது. 


செலுத்த வேண்டிய தொகையில் கிட்டத்தட்ட ரூ. 35 பில்லியன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கிய நிறுவனங்களுக்கும், மேலும் ரூ. 75 பில்லியன் அனல் மின் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 


இதற்கிடையில், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற செய்திகளை PUCSL மறுத்துள்ளது. 


இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போது பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


முழு நாடாளுமன்ற அறிக்கை: https://www.parliament.lk/news-en/view/2953 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.